ஆற்றையோ, ஏன் கடலையோ கடப்பதற்கு நாம் பாலங்களை பயன்படுத்துகிறோம். நம்மூரில் பாம்பன் பாலம் கடலை கடந்து செல்லும் போது ஏற்படும் அனுபவம் அலாதி. இது போன்ற விதவிதமான பாலங்கள் இருந்தாலும் ஜப்பானியர்கள் எல்லாவற்றை போலவே இதிலும் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்தான். படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ கார்களை வைத்து வித்தைகாட்டும் ராட்டினம் என்று நினைக்க வேண்டாம். நிஜமாகவே ஜப்பானில் உள்ள மட்சு மற்றும் சகாய் மினாட்டோ ஆகிய நகர்களை இணைக்கும் கடல் வழி பாலம்தான். சும்மா பார்த்தாலே அதிரடிக்கும் இந்த பாலத்தில் வாகனத்தில் செல்வது மிகவும் தில்லான காரியம் என்கின்றனர் சுற்றுலா பயணிகள். அது சரி பாலத்தை ஒரு மோட்டு வளைவு மாதிரி கட்டாமல் இப்படி குடை ராட்டினம் போல் கட்டியிருக்கிறார்கள் என்று கேட்க தோன்றுகிறது அல்லவா. வேறு என்ன எல்லாம் கப்பல்கள் அடியில் ஜாலியாக போய் வரத்தான். என்ன ஜப்பானுக்கு ஒரு ட்ரிப் போலாமா...