மிகப் பெரிய நட்சத்திரங்கள்
விண்வெளியில் சூரியனை போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. அவை வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக (black-hole) மாறுகின்றன. அவை ஒன்றையொன்று சுற்றி பிணையும்போது ஈர்ப்பலைகள் வெளியாகின்றன. இதைப் பயன்படுத்தி பல்வேறு ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்டு, லூசியானா மாகாணத்தில் லிவிங்ஸ்டன் ஆகிய இடங்களில் ஈர்ப்பலைகளை கண்டறியும் ஆய்வு மையங்கள் ‘லிகோ’ என்ற பெயரில் செயல்படுகின்றன.
இதேபோன்ற அதிநவீன ஆய்வு மையம் இந்தியாவில் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.‘இந்தியாவில் லிகோவின் மூன்றாவது ஆய்வு மையம், காந்திநகரில் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம், புனேவில் சர்வதேச விண்வெளி, விண்இயற்பியல் ஆய்வு மையம், இந்தூரில் ராஜா ரமணா அதிநவீன தொழில்நுட்ப மையம் ஆகியவற்றுடன் இணைந்து, வரும் 2023-ம் ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும்’ என்று அமெரிக்க விஞ்ஞானி கூறுகிறார்.