Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
29
Feb
சாம்சங் நிறுவனத்தின் துணை நிறுவனம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சாம்சங் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘சால்ட்டட் வென்ச்சர்’ வடிவமைத்துள்ள இந்த நவீன ஷூக்கள் ஓட்டப் பயிற்சி, உடல் பயிற்சி மற்றும் ‘கோல்ஃப்’ விளையாட்டின்போது, உங்களது உடல் அசைவுகளை வெகு துல்லியமாக கண்காணித்து, நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆண்டிராய்ட் செயலி உங்களது கைபேசிக்கு தகவல் அளிக்கும். அதற்கேற்றார்போல் உங்களது அசைவுகளை மாற்றிக் கொண்டால் உங்களது பயிற்சியின் அடுத்த நிலைக்கு செல்லலாம்.

உதாரணமாக, உடற்பயிற்சியின்போது பளுதூக்கும் வீரர்கள் சமநிலையான (பேலன்ஸ்) நிலையில் நின்றிருக்கிறார்களா? அல்லது, உடலின் அழுத்தவிசை ஒருபக்கமாக மட்டும் இருக்கிறதா? என்பதை ‘லாஃபிட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்கள் நொடிப்பொழுதில் சுட்டிக்காட்டும். அதற்கேற்ப, தங்களது இருப்பை அவர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற ‘மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ்’ கண்காட்சியில் இடம்பெற்ற இந்த சாம்சங் ‘லாஃபிட்’ ஷூக்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement