தர்மபுரி: தர்மபுரி அருகே பாலக்கோட்டில் பைனான்ஸ் அதிபர், பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் புதிய வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது. இதில் மேலும் 60 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). பைனான்ஸ் அதிபரான இவர், வட்டி கட்ட முடியாத பெண்களை மிரட்டி, தனது பண்ணை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார். அதனை தனது செல்போனில் பதிவு செய்து, அதைக் காட்டி மீண்டும் மீண்டும் அந்த பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், செல்போன் ரிப்பேர் ஆனதால், சர்வீஸ் செய்ய முன்னா என்பவரின் கடையில் கொடுத்த போது, அவர் மூலமாக சிவராஜின் ஆபாச வீடியோக்கள் வெளிவந்தது.
முன்னாவின் பேரத்துக்கு சிவராஜ் படியாததால், வீடியோக்களை பரப்பி உள்ளார். சிவராஜின் செல்போனில் 27 பெண்களுடன் அவர் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து, சிவராஜ், முன்னாவை போலீசார் கைது செய்தனர். சிவராஜூக்கு உடந்தையாக இருந்ததாக ஆட்டோ டிரைவர் மற்றும் பெண் உதவியாளரை தேடி வருகின்றனர். இந்நிலையில், 27 பெண்கள் மட்டுமல்லாது மேலும் 60 பெண்களை மிரட்டி சிவராஜ் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதற்கான புதிய வீடியோ ஆதாரங்கள் போலீசாரிடம் கிடைத்துள்ளது. சிவராஜை கைது செய்த போது, குப்பன்கொட்டாயில் உள்ள அவரது பண்ணை வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு ஒரு செல்போனை போலீசார் கைப்பற்றினர். அந்த போனின் மெமரி கார்டில், மேலும் 58 பெண்களுடன் சிவராஜ் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். இதில், சிவராஜின் உறவு பெண் ஒருவரும் உள்ளார்.
சிவராஜ் கடந்த 15 வருடங்களாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சிறு வயது முதலே பெண்கள் மீது அதிக நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார். சிவராஜின் இந்த குணம் பிடிக்காத காரணத்தால், அவரது முதல் மனைவி லதா, கடந்த 8 வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று சென்றார். பின்னர் 2வதாக அனுராதா என்ற பெண்ணுடன் சிவராஜ் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் பெண்களை மிரட்டி தனது வலையில் வீழ்த்தி உள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் 58 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிடி விற்பனை செய்தவர் கைது பாலக்கோடு பகுதியில் உள்ள செல்போன், சிடி கடைகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிரபு (26) என்பவர், தனது செல்போன் கடையில் சிவராஜின் பாலியல் படங்களை சிடியில் பதிவு செய்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார், மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரின் தீவிர நடவடிக்கைகளுக்கு அச்சமடைந்து, பாலக்கோடு பகுதியில் உள்ள பெரும்பாலான சிடி கடைகள் கடந்த சில தினங்களாக மூடப்பட்டுள்ளன.