சுப்பிரமணியசாமி பேச்சுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்காக கடுமையாக போராடி வருகின்ற வேளையில் தமிழக மீனவர்களின் படகுகளை நான் தான் சிறைப்பிடிக்க சொன்னேன் அதை ராஜபச்சே அரசு செய்து வருகிறது என்ற கூறிய சுப்பிரமணியசாமி பேச்சை பெருந்தலைவர் மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது தனிப்பட்ட சுப்பிரமணியசாமியின் பேட்டியா, அல்லது மத்திய அரசின் நிலையா? இதனை பாஜ அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும் சுப்பிரமணியசாமி, தான் சொன்ன கருத்து தவறு என்பதை உணர்ந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்.