Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2021
09
May
ஆவின் பால் விலை அதிரடி குறைப்பு: புதிய விலை பட்டியல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார். அதில் 2வதாக பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2025 முதல் குறைத்து விற்பனை செய்ய முதல்வர் அரசாணை பிறப்பித்துள்ளார். இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக 16.5.2025 முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து பெற்றுக்கொள்ளலாம்.

இதேபோல் சென்னையில் பால் அட்டைதாரருக்கு 16ம்  தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை வழங்கப்படும். 16ம் தேதி முதல் பால் அட்டை விலை குறைப்பு பட்டியல் அமலுக்கு வருகிறது.பொது மக்களுக்கு பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விநியோகம் பற்றிய தகவல்களுக்கு  சென்னையை பொறுத்தவரை பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்- 1800 425 3300, 044-23464575, 23464576, 23464578 ஆகும். மேலும் விவரத்துக்கு பொது மேலாளர்களை தொடர்பு கொள்ளும்படி ஆவின் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement