ரஜினி பட டைட்டில் வைத்தது ஏன்? உதயநிதி ஸ்டாலின் பதில்
ரஜினி நடித்த படம் ‘மனிதன்’. இந்த டைட்டிலை தனது படத்துக்கு வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்து அவர் கூறியது:வெகுளியான வழக்கறிஞர் ஒருவர் மிகப் பெரிய வழக்கறிஞரை கோர்ட்டில் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதில் அந்த வழக்கறிஞர் வெல்கிறாரா என்பதுதான் கதை. வெகுளி வழக்கறிஞர் வேடத்தை நான் ஏற்க, பெரிய வழக்கறிஞராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். படத்துக்கு பல தலைப்புகளை ஆலோசித்தோம். எல்லாவற்றையும்விட மனிதன் டைட்டில் பொருத்தமாக இருந்தது. முறைப்படி ஏவிஎம் பாலசுப்ரமணியத்திடம் அனுமதி பெற்று இதை வைத்திருக்கிறோம். ஹன்சிகா ஹீரோயின். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இயக்குகிறார். மதி ஒளிப்பதிவு. சந்தோஷ் நாராயணன் இசை. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.‘உண்மை சம்பவங்களை பின்னணியாக கொண்ட இக்கதையில் எதிர்பாராத கிளைமாக்ஸுடன் இருக்கும். இக்கதைபற்றி சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ஒருவரிடம் கருத்து கேட்டு அதன்பிறகு படமானது’ என்றார் இயக்குனர் அஹமத்