Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
22
Mar
மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் கருணாநிதியுடன் சந்திப்பு


சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் ஜவாஹிருல்லா, ரிபாஹி, ஹைதர் அலி, ரஹமத்துல்லா ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லம் வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். அப்போது பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது : மனித நேய மக்கள் கட்சி சார்பில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினோம். வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்று போட்டியிட விருப்பம் தெரிவித்தோம்.

நீண்ட கால அடிப்படையில், மத சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் இந்த கூட்டணிக்கு வந்துள்ளோம். தமிழக மக்களின் மனநிலை இந்த கூட்டணியை வெற்றி பெற செய்ய இருக்கிறது. இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். புதிய ஆட்சி மலரும். எத்தனை தொகுதி என்று பேசினீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அது தொடர்பாக தொகுதி உடன்பாட்டு குழுவுடன் பேசி எத்தனை தொகுதி என்பது முடிவு செய்யப்படும்’’ என்றார். இந்த கூட்டணிக்கு தேமுதிக வருமா என்ற கேள்விக்கு ‘‘அழைப்பது எங்கள் கடமை. ஏற்பது அவர்களது விருப்பம்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement