மும்பை, மலாடு மேற்கு மால்வாணி கேட்
மும்பை, மலாடு மேற்கு மால்வாணி கேட் 5ம் நம்பர் பகுதியில் தனியார் பயிற்சி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த வாரம் வீட்டுப் பாடம் எழுதாத ஒரு சிறுவன் முழு நிர்வாணமாகவும், மற்றொரு சிறுவன் மேல்சட்டை மட்டும் அணிந்த நிலையில் வகுப்புக்கு வெளியே நின்றிருந்தனர்.இதன் வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த தனியார் சமூகசேவை அமைப்பு ஒன்று, இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது. போலீஸ் விசாரணையில், வீட்டுப் பாடங்களை எழுதாத 2 மாணவர்களை பயிற்சி பள்ளியில் நிர்வாணமாக நிற்கவைத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கணேஷ் நாயர், சரோஜ் ஜெய்ஸ்வாஸ் என்ற 2 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.