சீனாவின் பியூஜியான் மாகாணம்
சீனாவின் பியூஜியான் மாகாணத்தை சேர்ந்த துவானின் மனைவி சியாவோ மேய். கர்ப்பிணியான இவர், அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பகுதிநேர வேலை செய்துவருகிறார். இவரது கணவர் துவானோ, எப்போதும் இன்டர்நெட் சென்டர்களில் பொழுது போக்குபவர். இத்தம்பதி விலை உயர்ந்த ஐபோன் வாங்க ஆசைப்பட்டனர். ஆனால், கையில் பணம் இல்லை. இதைத் தொடர்ந்து, தங்களுக்கு பிறக்கும் குழந்தையை விற்பதற்கு இருவரும் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, பிறக்கப்போகும் குழந்தை விற்பனை என்று பல்வேறு சமூக வலைதளங்களில் விளம்பரம் கொடுத்தனர். ஒருவர் அக்குழந்தையை ரூ.2.5 லட்சம் விலை பேசி வாங்கிவிட்டார். பெண் குழந்தை பிறந்து 18 நாட்கள் ஆனவுடன் ரகசியமாக விற்றுவிட்டு, சியாவோ மேய் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சீன போலீசாருக்கு புகார் போனது. குழந்தை விற்ற தொகையில் ஐபோன் மற்றும் மோட்டார் பைக் ஒன்றை வாங்க வந்தபோது துவானும் சியாவோ மேய்யும் பிடிபட்டனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெற்றோரின் வாதங்களை நீதிபதி ஏற்கவில்லை. இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.