‘‘ஏய்... மணி பத்தாச்சு. த்ரீஃபேஸ் கரண்டு வந்திருக்கும். தோப்புக்கு போய் மோட்டார் போட்டு வந்துரலாம். துணைக்கு வர்றியா?’’ நண்பருடன் கிளம்பினார் புதுவை குருவிநத்தத்தை சேர்ந்த ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 25 வயது வாலிபர். கல்யாணம் ஆக வில்லை. துணிச்சல்காரர். மறக்காமல் டார்ச் லைட்டையும் எடுத்துக்கொண்டார். இருட்டென்றால் அப்படி ஒரு இருட்டு. டார்ச் லைட்டை அடித்தபடியே வயல் வரப்பில் நடந்து சென்றார்கள். ஆளை மறைக்கும் அளவுக்கு செடி, கொடிகள் வளர்ந்திருந்ததால் அதன் நடுவே புகுந்து சென்றார்கள். 20 நிமிஷ நேர நடைக்கு பிறகு, தென்னந்தோப் புக்கு வந்து சேர்ந்தனர். அங்கு மோட்டார் கொட்டகை மேல் மங்கலாக எரிந்துகொண்டிருந்தது குண்டு பல்பு. கொட்டகைக்கு போய் மோட்டாரை போட்டார் ராஜா. பட்டென்று சத்தம். பீஸ் போய்விட்டது. ஒற்றை பல்பும் அணைந்ததில் கும்மிருட்டு பயமுறுத்தியது.
பீஸை போடலாம் என்றால் டார்ச் மங்க ஆரம்பித்தது. திருகி, தட்டிப் பார்த்தும் பயனில்லை. என்ன செய்யலாம் என்று இருவரும் யோசனையில் இருந்த நேரத்தில்.. திடீரென படபடவென்று சத்தம். பக்கத்தில் தரைக் கிணற்றில் உள்ள மோட்டார் கொட்டகை தகரம் தடதடவென்று ஆடிக்கொண் டிருந்தது. இந்த நேரத்தில் என்ன சத்தம்..? ராஜா மெதுவாக எட்டிப் பார்த்தார். ஆள்நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் வெள்ளை வேட்டி காற்றில் பறப்பதுபோல இருந்தது.
தைரியம் உள்ளவர்தான் என்றாலும் வியர்க்க ஆரம்பித்தது. நண்பரை கூப்பிட்டார். ‘‘அங்கு என்னமோ அசையுது பாரு’’. நண்பர் பார்த்தார். ராஜாவும் சேர்ந்து பார்த்தார். வேட்டி அசைந்த இடத்தில் இப்போது ஒரு உருவம் தெரிந்தது. இருவரையும் பீதி பற்றிக் கொண்டது. உடல் வெடவெடக்க ஆரம்பித்தது. லப்டப் அதிகரித்தது. ‘‘வா போய்டலாம்’’ஓட்டமும் நடையுமாக புறப்பட்டார்கள். சிறிது தூரம் போனதும் நண்பருக்கு சந்தேகம். நின்று திரும்பிப் பார்த்தார்.
அவர்களுக்கு பின்னால் 10 அடி தூரத்தில் வேட்டி அசைந்துகொண்டிருந்தது. அப்போது ஓட்டம் பிடித்தவர்கள்தான்.. வயல், வரப்பு, மரவள்ளிக்கி ழங்கு தோட்டம், கரும்புக்காடு.. கண்மண் தெரியாமல் ஓடினார்கள். எங்கெங்கோ சுற்றி ஒருவழியாக ஊர் வந்து சேர்ந்தார்கள். அது வரை அவர்களை துரத்திவந்த வேட்டி உருவம் ஊர் எல்லையோடு நின்றுவிட்டது.
வீட்டுக்கு சென்று பல மணி நேரம் ஆன பிறகும், அவர்களது பதற்றம் அடங்கவில்லை. அன்று இரவு முழுவதும் இருவருக்கும் தூக் கமே வரவில்லை. கண்ணை சற்று மூடினாலும் கண்எதிரே வேட்டி அசைந்து கிலி ஏற்படுத்தியது. இந்த விஷயம் வெளியே தெரியவந்ததில்.. மறுநாள் ஊரே பரபரத்தது.
ஊர் பெரியவர் ஒருவர் சொன்னார்.. ‘‘அந்த மோட்டார் கொட்டாயில 6 மாசம் முன்னாடி பஞ்சு வியாபாரி ஒருத்தரு, தொட்டியில கால்கழுவ போனப்போ, போஸ்ட் தாங்கிப்பிடிக்கும் எர்த் கம்பியில தலை பட்டுருச்சு. கரண்டு அடிச்சி அங்கேயே செத்துட்டாரு. அவருதான் ஆவியா சுத்துராரு’’ என்றார். சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றாலும் இப்போதும் அந்த தோப்பு பகுதி அப்பகுதியினருக்கு பீதியாகத்தான் இருக்கிறது.
இன்னொருவர் வேறொரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.. ‘‘40 வருஷம் முன்னாடி மயிலம் முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திரம் திருவிழாக்கு அப்பா, அம்மா கூட்டிட்டு போயிருந்தாங்க. எனக்கு 12 வயசு இருக்கும். ஊர் திரும்ப பஸ்சுக்கு காத்திருந்தோம். பஸ் கிடைக்காததால விழுப்புரம் போயி கடலூர் வந்தோம். கங்கணாங்குப்பம் பெண்ணையாத்து பக்கத்துல இறங்கி ஆத்தக் கடந்து போய்டலாம்னாங்க. தண்ணி இல்லை.
அதனால, தைரியமா நடந்து வந்தோம், ஆத்து நடுவுல வந்தப்போ 60 அடி உசரம் கொண்ட 5 உருவங்க சுடுகாட்டை நோக்கி போயிட்டு இருந்தது. எல்லாரும் பயந்துட்டோம். உருவமெல்லாம் போனதுக்கு அப்புறம் வீடு வந்து சேர்ந்தோம். சுடுகாட்டு பகுதியில ஆவிங்க இப்படி கருப்பு உருவம் எடுத்து அலையும்னு பெரியவங்க சொன்னாங்க. பெண்ணையாத்துப்பக்கம் போனாலே கருப்பு உருவம்தான் ஞாபகம் வருது’’ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது.
நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40
வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது.
நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40
வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது.
-Updated 1/10/2025 10:49:53 AM
-Updated 1/6/2025 3:32:36 PM
-Updated 1/6/2025 3:26:40 PM
-Updated 1/6/2025 3:23:57 PM
-Updated 1/6/2025 3:19:43 PM
-Updated 1/6/2025 3:17:57 PM
-Updated 1/6/2025 3:17:03 PM
-Updated 1/6/2025 3:11:00 PM
-Updated 1/6/2025 3:09:20 PM
-Updated 1/6/2025 3:08:15 PM