Untitled Document
பாண்டியன் கிராம வங்கியில் 248 ஆபீசர் பணியிடங்கள்

பாண்டியன் கிராம வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 248 பணியிடங் களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. ஆபீஸ் அசிஸ்டென்ட்ஸ்: மொத்த இடங்கள்: 138 (பொது74, ஓபிசி37, எஸ்சி26, எஸ்டி1). வயது: 18க்கு மேல்   28க்குள். கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். கம்ப்யூட்டர் திறன் விரும்பத் தக்கது.

2. ஆபீசர்நிலை (1): 84 (பொது41, ஓபிசி21, எஸ்சி11, எஸ்டி11). வயது: 18க்கு மேல் 28க்குள். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், கால்நடை அறிவியல், கூட்டுறவு, விவசாய சந்தையியல், தகவல் தொடர்பியல், மேலாண்மை, சட்டம், பொருளியல் கணக்கியல் பட்டங்களுக்கு முன்னுரிமை.

3. ஆபீசர் நிலை (2): 24 (பொது24). வயது: 21க்கு மேல் 32க்குள். கல்வித்தகுதி:  எலக்ட்ரா னிக்ஸ்/தகவல் தொடர்பியல்/கம்ப்யூட்டர் அறிவியல்/தகவல் தொழில்நுட்பவியல் பாடங்கள் ஏதேனும் ஒன்றில் 50 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன் டிகிரி மற்றும் கம்ப்யூட்டர் தகுதி

4. ஆபீசர் நிலை (3): 2 (பொது2). வயது: 40க்குள். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் பாங்கிங், மார்க்கெட்டிங், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பாடத்தில் டிப்ளமோ. இதுதவிர ஏதேனும் ஒரு வங்கியில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம்.  
இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை உண்டு. வயது வரம்பிற்கு 26.8.2025 தேதியை அடிப்படையாக கொள்ள வேண்டும்.
இவற்றில் ஊனமுற்றோருக்கு 8 இடங்களும், முன்னாள் ராணுவத் தினருக்கு 13 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளன.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ஒவ்வொரு பதவிக்கும் தலா ரூ.300. எஸ்சி., எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊனமுற்றோருக்கு தலா ரூ.50 மட்டும். இதை‘‘Pandyan Grama Bank Recruitment Project-2010’’என்ற பெயருக்கு மதுரையில் செலுத்தத்தக் கவகை யில் டிடி எடுக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக் கப்படுவர். தேர்வு மதுரை, நெல்லை, விருதுநகர், திருச்சி ஆகிய மையங் களில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் www.pandyangramabank.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப் பிட்ட இணையதளத்தை பார்க்க வும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2011. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்:1.2.2011. தேர்வு நடைபெறும் நாட்கள்: ஆபீஸ் அசிஸ்டென்ட்ஸ்: 10.4.2011. ஆபீசர்ஸ்:17.4.2011.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க
நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40

வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது.

நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40

வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது.

நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40

வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது.

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Follow Me

உணவு உற்பத்தி அதிகரிக்கும்

பாதுகாக்ககடந்த