தமிழ்நாடு அஞ்சலக முகவர்கள் நலவாழ்வு சங்கம் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு அஞ்சலக முகவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். ரிசர்வ் வங்கி முன்னாள் துணை கவர்னர் சியாமளா கோபிநாத் பரிந்துரையை ரத்து செய்ய கோரி கோஷம் எழுப்பினர். முகவர்களின் வளர்ச்சிக்கு உதவிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நினைவுகூரும் வகையில் முகமூடி அணிந்துள்ளனர்.