கிருஷ்ணன் கோயிலில் கொள்ளை
10/21/2016 2:55:41 PM
ஆவடி, -சென்னை அம்பத்தூர், கிருஷ்ணாபுரம், நைனியம்மாள் தெருவில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் உள்ளது. நேற்றிரவு பூஜை முடித்துவிட்டு பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.இன்று அதிகாலை 6 மணியளவில் கோயிலை திறக்க பூசாரி வந்தபோது கோயில் அலுவலக கதவு திறந்து கிடந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அந்த உண்டியலில் இருந்த சுமார் ₹40 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.கோயில் நிர்வாகி அருணாசலம் கொடுத்த புகாரின்படி, அம்பத்தூர் போலீஸ்இன்ஸ்பெக்டர் கந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றார்.