திருப்போரூர் பகுதியில் நாளை மின்தடை
10/21/2016 2:55:20 PM
திருப்போரூர், -திருப்போரூர் அருகே மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (22ம் தேதி) நடக்கிறது. இதனால் மாம்பாக்கம், பொன்மார், புதுப்பாக்கம், வெளிச்சை, கண்டிகை, கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், வெங்கம்பாக்கம், ரத்தினமங்கலத்தின் ஒரு பகுதி, கேளம்பாக்கம், தையூர், கொளத்தூர், சாத்தங்குப்பம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. பராமரிப்பு பணி முடிந்ததும் மின் விநியோகம் கொடுக்கப்படும்.இத்தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தேசாபிமானன் தெரிவித்து உள்ளார்.