இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

சளி, இருமலை போக்கும் மருத்துவ முறைகள்

10/21/2016 2:44:22 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


எளிதாக கிடைக்க கூடிய பொருட்கள், மூலிகைகளை கொண்டு நோய்களை குணப்படுத்துவது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சளி, தொண்டை கட்டு, இருமல் போன்ற பிரச்னைகள் வருகிறது.
திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி, உடல் வலி போன்றவை ஏற்படுகிறது. கற்பூரவல்லி, புதினா, துளசி, தூதுவளை போன்றவற்றை கொண்டு இப்பிரச்னைகளை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம்.   
கற்பூரவல்லியை பயன்படுத்தி மூக்கடைப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, புதினா, மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். இதில், 2 கற்பூரவல்லி இலைகள், புதினா, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும். நுரையீரல் தொற்று குறையும்.
தொண்டை கட்டு, கரகரப்புக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மிளகுப்பொடி, ஜாதிக் காய் பொடி, தேன். சிறிது ஜாதிக்காய் பொடி, 2 சிட்டிகை மிளகுப் பொடி, இதனுடன் தேன் விட்டு கலந்து சாப்பிடும்போது தொண்டை கட்டு சரியாகும். காலை, மாலை சாப்பிட்டுவர இருமல், சளி இல்லாமல் போகும். உடல் சமநிலையை பெறும்.

துளிசியை பயன்படுத்தி சளி, இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துளசி, ஜாதிக்காய் பொடி, சுக்குப் பொடி. பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு சிறிது துளசி இலைகள், சிறிது சுக்குப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடித்துவர சளி, இருமல் குணமாகிறது. இந்த தேனீர் செரிமானத்தை தூண்டுகிறது. இதை பெரியவர்கள் 100 மில்லி அளவுக்கு எடுக்கலாம். இந்த மருந்தால் மூக்கடைப்பு விலகி போகிறது. நெஞ்சக சளி, உடல் வலி, காய்ச்சல் சரியாகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட துளசி ஜீரண கோளாறுகளுக்கு மருந்தாகிறது. ஜாதிக்காய் வயிற்று புண், செரிமானத்துக்கு மருந்தாகிறது. சளி, தொண்டைக்கட்டு பிரச்னையை போக்குகிறது. சுவாச பாதையை சீர்செய்கிறது.

தூதுவளையை பயன்படுத்தி நெஞ்சக சளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தூதுவளை, ஆடாதோடை இலைப் பொடி, திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு. பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விடவும். இதில் தூதுவளை இலையை போடவும். அரை ஸ்பூன் ஆடா தோடை இலைப் பொடி, கால் ஸ்பூன் திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு  சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி கரையும். தொண்டை வலி சரியாகும். சுவாசபாதையில் ஏற்படும் தொற்று குணமாகும்.

மேலும் சில
  • தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்



  • வலி, வீக்கத்தை போக்கும் மஞ்சள்



  • மார்பக கட்டிகளை போக்கும் மருத்துவம்



  • சிறுநீர் எரிச்சலை போக்கும் மருத்துவம்



  • எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம்



  • தலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்



  • மாதவிலக்கு பிரச்னைகளுக்கான மருத்துவம்



  • தேமலை குணப்படுத்தும் மருத்துவம்



  • மூலநோயை குணப்படுத்தும் மிளகு



  • புண்களை ஆற்றும் மரமல்லி



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]