திருவள்ளூரில் நாளை 6 மையங்களில் நடக்கிறது - கல்லூரி உதவி பேராசிரியர் எழுத்து தேர்வு
10/21/2016 2:35:23 PM
திருவள்ளூர், -ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான போட்டி எழுத்து தேர்வு நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் திருவள்ளுர் மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை:தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் தவறாது வருகை தரவேண்டும். நுழைவு வாயிலிலேயே உடமைகளை தங்களுடன் வருபவர்களுடன் ஒப்படைத்து விட வேண்டும். தேர்வர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு அவர்களே பொறுப்பு,
செல்போன், ஹெட் போன், புளு டூத், கால்குலேட்டர், கைப்பை, எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. 2பால்பாயிண்ட் பேனா, நுழைவு சீட்டு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். கைக்குட்டை உட்பட வேறு எந்த ஒரு பொருளையும் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.காலை 9.30 மணிக்கு மேல் எந்த ஒரு தேர்வரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் காவல்துறை அலுவலர்கள் உதவியுடன் முழு சோதனை, அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் செய்யப்படும். அதன்பிறகு தேர்வு மையத்தினுள் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.