இலங்கைக்கு கடத்த முயன்ற ₹1 கோடி போதை மாத்திரை பறிமுதல் 3 பேர் கைது
10/21/2016 2:33:37 PM
மண்டபம், -ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் மற்றும் டூவீலரை மறித்து சோதனையிட்டனர்.இதில் கார், டூவீலரில் இலங்கைக்கு கடத்த முயன்ற போதை மற்றும் வலி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார் முருகன் (47), கோபால் (47) மனோஜ் (20) ஆகியோரை கைது செய்தனர்.