தலையில் அம்மிக்கல்லால் தாக்கி 2 பெண்டாட்டிக்காரர் படுகொலை
10/21/2016 2:32:43 PM
ஆரணி, - திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூரை பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன், கதிரேசன், ஜெகதீசன், சுந்தரேசன், கோட்டீஸ்வரன். அண்ணன்-தம்பிகளான இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இதில் சரவணனுக்கு (52), ஜெயராணி, பச்சையம்மாள் என்று 2 மனைவிகள். இவர்களுக்கு சதீஷ், தமிழரசன் என்ற 2மகன்கள் மற்றும் தாட்சாயிணி, சத்யா என்ற மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் சரவணனுக்கும் அவரது தம்பி ஜெகதீசன், சுந்தரேசன் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீசன், சுந்தரேசன் ஆகியோர் அம்மிக்கல்லால் அண்ணன் சரவணனை தாக்கி கொலை செய்து தப்பியோடி விட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் குடி போதை தகராறில் சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறில் 2தம்பிகள் சேர்ந்து அண்ணன் சரவணனின் தலையில் அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியில் பதுங்கி இருந்த ஜெகதீசனை இன்றுகாலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட சுந்தரேசனை ேதடிவருகின்றனர். இச்சம்பவம் இந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.