இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தீபாவளியை கொண்டாட மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த வாலிபர்கள்

10/21/2016 2:30:11 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்

திருச்செங்கோடு, -நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ராயர்பாளையம் நெடுங்காட்டைச் சேர்ந்தவர் பாவாயி (70), தனியாக வசித்து வந்தார். கடந்த 18ம் தேதி இரவு பாவாயி கொலை செய்யப்பட்டார். வீட்டிலிருந்த 2 தங்க மோதிரம் மற்றும் ₹2 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், ராசிபுரம் தொப்பப்பட்டியை சேர்ந்த 19, 17 வயதான 2 வாலிபர்களை கைது செய்தனர். கைதான 19 வயது வாலிபர் அளித்த வாக்குமூலம்: ராசிபுரம் நகரில் டூவீலர் ஷோரூமில் வேலை செய்து வந்தேன். தற்போது அங்கிருந்து நின்றுவிட்டேன். இதனால் பணம் இல்லாமல் தடுமாறினேன். இதனால், தீபாவளியை சிறப்பாக கொண்டாட, எனது நண்பருடன் (17 வயது வாலிபர்) சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டேன். மூதாட்டி பாவாயி தனியே வசிப்பதை அறிந்து, அவரை கொலை செய்து கொள்ளையடிக்க முடிவு செய்தோம்.

சம்பவத்தன்று இரவில், இருவரும் அங்கு சென்றோம். மாட்டுத்தொழுவத்தில் இருந்த பாவாயியை முகத்தை அமுக்கி, வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டிலில் போட்டோம். அப்போதும் அவருக்கு மூச்சு இருந்ததால், எனது நண்பர் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் வீட்டிலிருந்த 4 கிராம் மற்றும் 6 கிராம் தங்க மோதிரம், ரொக்கம் ₹ 2 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு பைக்கில் தப்பினோம். ஆளுக்கு ஒரு மோதிரமும், ₹ஆயிரமும் எடுத்துக் கொண்டோம். திருடிய பணத்தில் மது குடித்தோம். ஆனால், போலீசில் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.இருவரையும் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதி உத்தரவின்பேரில், 19 வயது வாலிபரை சேலம் கூர்நோக்கு இல்லத்திலும், 17 வயது வாலிபரை பரமத்தி இளங்குற்றவாளிகள் சிறையிலும் அடைத்தனர்

மேலும் சில
  • சீர்காழி அருகே பயங்கரம் காதலனுடன் குடும்பம் நடத்திய நர்சிங் மாணவிக்கு சரமாரி வெட்டு



  • மாஜி அமைச்சர் கொலை: போலீஸ்காரர் சஸ்பெண்ட்



  • மாணவர் கொலை; விவசாயி கைது



  • ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் இருந்து உயர் அழுத்த மின் கம்பி மீது தூக்கி வீசி இன்ஜினியர் கொலை



  • பாரிமுனையில் பயணிகள் அலறியடித்து ஓட்டம் - பஸ்சில் கல்லூரி மாணவர்கள் மோதல் கட்டை, இரும்பு பைப்பால் தாக்குதல்



  • கர்ப்பிணி கொலை: காதலன் கைது



  • மாஜி அமைச்சர் சிவக்குமார் கொலை சரணடைந்த 4 வாலிபர்களை கஸ்டடியில் விசாரிக்க முடிவு



  • கணவனை கொல்ல முயன்ற கள்ளக்காதல் ஜோடியை மரத்தில் கட்டிவைத்து சரமாரி அடி, உதை



  • மின் இணைப்பு மாற்ற ரூ.3000 லஞ்சம்: பொறியாளர் கைது



  • மனைவி கழுத்தறுத்து கொலை தொழிலாளிக்கு ஆயுள் சிறை



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]