தெருவில் பைக்கை வேகமாக ஓட்டியதால் வாலிபர்கள் மண்டை உடைப்பு
10/21/2016 2:28:25 PM
புழல், -தெருவில் பைக்கை வேகமாக ஓட்டிச்சென்ற வாலிபர்களின் மண்டை உடைக்கப்பட்டது. இதுசம்பந்தமாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அம்பத்தூர், காமராஜர்புரம், வஉசி தெருவை சேர்ந்தவர்கள் வினோத் (20), அசோக் (24), நிர்மல் (22). இவர்கள் நேற்றிரவு ஒரே சைக்கிளில் காமராஜர்புரம், அம்பேத்கர் தெரு வழியாக வந்தனர்.அப்போது அத்தெருவில் நின்று கொண்டிருந்த சங்கர், பிரபு ஆகியோர் குடிபோதையில் பைக்கை மறித்து ‘எங்கள் தெரு வழியாக ஏன் செல்கிறீர்கள்? என்று அவர்களிடம் தகராறு செய்தனர். திடீரென அங்கு கிடந்த கட்டையை எடுத்து வினோத், அசோக் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதனால் சங்கரும் பிரபுவும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அசோக்கின் தலையில் 4 தையல்களும், வினோத்துக்கு 5 தையல்களும் போடப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரின்படி, அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபு ஆகியோரை தேடி வருகின்றனர்.