ரோஜர் பெடரர் விபத்தில் சிக்கியதாக வெளியான செய்தி புரளி - ரசிகர்கள் நிம்மதி
10/21/2016 2:23:52 PM
மாட்ரிட்: சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியில், ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த கார் விபத்து ஒன்றில், ரோஜர் பெடரர் சிக்கி கொண்டதாகவும், அவர் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் உண்மையில் ரோஜர் பெடரர் எந்த விபத்திலும் சிக்கவில்லை என்றும், இது வெறும் புரளி என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பெடரரின் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.