இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சமந்தாவை ஓரம் கட்ட சம்பளம் குறைக்கும் நயன்தாரா

10/21/2016 2:21:56 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


ஹீரோயின்கள் மத்தியில் நட்பு போக்கு நிலவி வந்த நிலையில் திடீரென்று போட்டி மனப்பான்மை அதிகரித்துள்ளது. அனுஷ்கா, சமந்தா, பிரியா ஆனந்த் போன்றவர்கள் தனது படங்களில் மற்றொரு கதாபாத்திரம் இருக்கும் பட்சத்தில் அதில் நடிக்க தோழி நடிகைகளை சிபாரிசு செய்து வந்தனர். நித்யா மேனன், பிரணிதா, விசாகா சிங் போன்றவர்கள் அதுபோல் சில படங்களில் வாய்ப்பு பெற்றனர். சம அந்தஸ்திலிருக்கும் ஹீரோயின் களுக்குள் ஒருபுறம் நட்பு இருந்தாலும், மறுபுறம் போட்டி தொடர்கிறது. நயன்தாரா, திரிஷா தோழிகளாக பழகினர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைந்து நடிக்கவிருந்தனர். சம்பள விஷயத்தில் வித்தியாசம் ஏற்பட்டதால் திரிஷா நடிக்க மறுத்துவிட்டார். பின்னர் அப்படம் பெண்டிங்கில் வைக்கப்பட்டது.
தமிழில் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கில் கைவசம் படம்  இல்லை. மீண்டும் தனது மார்க்கெட்டை அங்கு நிலைநாட்ட எண்ணி உள்ளார். அஜீத் நடித்த ‘வேதாளம்’ படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க உருவாகிறது. நேசன் இயக்கு கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க சமந்தாவிடம் பேசப்பட்டது. அவர் ரூ. 2 கோடி சம்பளம் கேட்டாராம். குறைக்கும்படி கேட்டபோது மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டனர். அவரும் தனது சம்பளத்தை ரூ. 2 கோடிக்கு மேல் கேட்டாராம். சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி கேட்டபோது ஓ.கே சொல்லிவிட்டாராம். ஒன்றரை கோடிக்கும் குறைவாக சம்பளம் பெற்றுக்கொள்ள சம்மதித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. சமந்தாவை ஓரம்கட்டவே நயன்தாரா சம்பளத்தை குறைக்க ஒப்புக்கொண்டாராம். பட தரப்பில் விசாரித்தபோது நயன்தாராவை இன்னும் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யவில்லை என்கின்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மத்தியில்தான் தொடங்க உள்ளது.

மேலும் சில
  • பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ



  • அப்பா காலத்து கதைக்கு தாவிய இளம்ஹீரோ



  • வயது அதிகமானால் கவலை இல்லை : ஸ்ரேயா ஹேப்பி



  • நயன்தாராவுடன் நடிக்கவில்லை விஷால் மறுப்பு



  • விவாகரத்து கேட்ட வில்லன் நடிகர் : மனைவியுடன் இணைய முடிவு



  • கண்பார்வை பெறுகிறார் பெண் பாடகி



  • நயன்தாரா பெயர் சாயலில் நயனாநாயர் என்ட்ரி



  • சிகப்பு நிறத்தால் வாய்ப்பு போச்சா? தமன்னா பதில்



  • மீண்டும் மும்பை தாதா ஆகிறார் ரஜினி? '



  • பொங்கல் ரேஸிலிருந்து திடீரென பின்வாங்கிய விஜய்சேதுபதி



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]