புரூஸ்லீயிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்
10/21/2016 2:21:30 PM
70களில் தொடங்கிய புரூஸ்லீயின் மோகம் இன்றும் தொடர்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு புரூஸ்லீ என பெயரிடப்பட்டது. உடற்தோற்றத்தில் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரகாஷ், புரூஸ்லீ கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா அல்லது அந்த டைட்டிலுக்கு ஏற்ற கதைக்காவது நியாயம் செய்ய முடியுமா என்று கேள்வி எழுந்தது. இப்படத்தின் ஆடியோ, டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.
படம் பற்றி இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் கூறும்போது,’புரூஸ்லீன்னு டைட்டிலை பார்த்ததும் ஏதோ பெரிய ஆக்ஷன் படம் என்று எண்ணிவிடாதீர்கள் இது முழுக்க ஒரு நகைக்சுவை படம். ஜி.வி.பிரகாஷிடம் இப்பட டைட்டிலை கூறும்போது வித்தியாசமாக இருக்கிறதே என்று ஒப்புக்கொண்டார். கதையும் பெரிதாக ஒன்றும் கிடையாது. பொழுது போக்கு படமாகவே உருவாகிறது. சண்டை காட்சியில் பிரகாஷ் நடிக்கவில்லை. ஆனால் அவரை இன்னொருபடிக்கு இப்படம் உயர்த்தும். இந்த டைட்டில் வைத்ததற்காக புரூஸ்லீயிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கிருத்தி கர்பண்டா ஹீரோயினாக நடிக்கிறார்’ என்றார்.
இயக்குனரின் பேச்சை ஜி.வி.பிரகாஷ்குமார் கைதட்டி வரவேற்றார். பிறகு அவர் பேசும்போது, ‘தமிழ் ஹீரோவுக்கும் ஹாலிவுட் வில்லனுக்கும் நடக்கும் கதை என்று இயக்குனர் கூறினார். வித்தியாசமாக இருக்கிறதே என்று நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்றார். நிகழ்ச்சியில் பசங்க பாண்டிராஜ், தயாரிப்பாளர்கள் ஜே.செல்வகுமார், பி.ரவிசந்திரன், ஜே.விட்டல் குமார் மற்றும் பட குழுவினர் கலந்துகொண்டனர்.