ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய வீட்டை தேடிய இயக்குனர்
10/21/2016 2:20:07 PM
நிஜ சம்பவங்கள் நடக்கும்போது குறிப்பிட்ட இடத்திலேயே படப்பிடிப்பு நடத்துவது சில இயக்குனர்களின் ஸ்டைல். சென்டிமென்ட்டுக்காக சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதுண்டு. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சந்தன கடத்தல் வீரப்பனால் அவரது பண்ணை வீட்டிலிருந்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பானது. ‘அதிரன்’ படத்திலும் கடத்தல் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. இந்த சம்பவத்தை ராஜ்குமார் கடத்தப்பட்ட பண்ணை வீட்டை தேடி படமாக்கினார் இயக்குனர் ஜே.வி.மோகன்.
‘இது சந்தன வீரப்பன் சம்பந்தப்பட்ட கதையா?’ என்று இயக்குனரிடம் கேட்டபோது, ‘நிச்சயம் கிடையாது. இரண்டு நண்பர்கள் பற்றிய கதை. ஒரு நண்பர் கடத்தப்படுகிறார். அவரைத் தேடி மற்றொரு நண்பர் செல்கிறார். அவருக்கு 4 பேர் சேர்ந்த திருட்டு கும்பல் உதவ முன்வருகிறது. அதற்கு காரணம் என்ன என்பதுதான் கதை. தமிழ்நாடு, கர்நாடகாவில் படப்பிடிப்பு நடந்தது. கர்நாடகாவில் சாலவாடி பகுதியில் உள்ள ராஜ்குமாரின் தோட்ட காஜனூரில் பண்ணை வீட்டில் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்துதான் ராஜ்குமார் சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். இதுவரை இங்கு படப்பிடிப்பு நடந்ததில்லை. முதன்முறையாக அதிரன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ராஜா, சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் சுரேஷ்குமார், சஞ்சனா, அப்துல் ்ரகுமான்கான், தங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரகு இசை’ என்றார்.