டிஆர்எஸ் முறையில் முன்னேற்றம்
10/20/2016 2:13:28 PM
புதுடெல்லி: கிரிக்கெட்டில் நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறைக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோர், ஐசிசி நிர்வாகிகளை நேற்று சந்தித்து பேசினர். அப்போது ேமம்படுத்தப்பட்ட டிஆர்எஸ் முறை குறித்து, அனுராக் தாக்கூர், கும்ப்ளே ஆகியோருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், ஐசிசி சார்பில், அதன் பொது மேலாளர் ஜியோப் அலர்டைஸ் கலந்து கொண்டார். இது குறித்து பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் கூறுகையில், டிஆர்எஸ் முறையில் சில முன்னேற்றங்கள் உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவோம் என்றார்.