வெஸ்ட் இண்டீசின் போராட்டம் ஈர்த்தது - பாக்.பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கருத்து
10/20/2016 2:13:06 PM
துபாய்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக துபாயில் பகலிரவாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் 56 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நாளை தொடங்குகிறது.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில், துபாய் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் போராடிய விதத்தை பார்க்கும்போது, 2வது டெஸ்ட்டில் அவர்கள் எழுச்சி பெறுவார்கள் என நினைக்கிறேன். துபாய் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீசின் போராட்டம் என்னை ஈர்த்தது. அதிலும் பிராவோவின் ஆட்டம் மிக சிறப்பாக இருந்தது. ஆனால் 2வது இன்னிங்சில் பாகிஸ்தானின் பேட்டிங் தடுமாறியது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. சில சமயங்களில் இதுவும் நல்லதுக்காகவே நடக்கிறது. ஏனெனில் இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த முறை நடக்காது என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றார்.