டிப்ளமோ நர்சிங் 3 நாள் கலந்தாய்வு இன்று தொடக்கம்
10/18/2016 3:12:54 PM
சென்னை, - டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான 3 நாள் கலந்தாய்வு ஒமந்தூரார் அரசினர் மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் 14 அரசு மருத்துவ கல்லூரிகள், 8 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. மாணவிகளுக்கு மட்டுமான இந்த இடங்களுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில் இன்றைய கலந்தாய்வில் கலந்து கொள்ள 734 மாணவிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் கலந்தாய்வு நடக்கும் விபரம் தெரிவிக்கப்பட்டது. அதில் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை 169 மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்து, கல்லூரி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.