சிரஞ்சீவியை வளைத்த லட்சுமிராய் - ஒரு பாடலுக்கு ₹40 லட்சம் லபக்
10/18/2016 2:13:17 PM
திரையுலகில் கிடைக்கும்வாய்ப்பை தவறவிட்டால் அந்த இடத்தை நிரப்ப நிறையபேர் காத்திருக்கிறார்கள். அழகும், இளமையும் ஒரு சேர அமைந்திருந்தும் சில ஹீரோயின்கள் தங்கள் நடவடிக்கையால் வாய்ப்புகளை பறிகொடுக்கின்றனர். நித்யாமேனன் இந்த ரகத்தை சார்ந்தவர். அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் மெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா. தமிழ், தெலுங்கில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில் சிரஞ்சீவியுடன் கைதி நம்பர் 150 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது. பெரிய சம்பளம் பேசி நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தும் என்று எதிர்பார்த்தநிலையில் அது நிறைவேறாத ஆசையாகி இருக்கிறது.
பாடல் காட்சிக்கான காஸ்டியூம் பொறுப்பை சிரஞ்சீவி மகள் சுஷ்மிதா ஏற்றிருக்கிறார். நடனத்தை ராகவா லாரன்ஸ் அமைக்கிறார். படப்பிடிப்பு நாளில் கேத்ரின் அணிந்துவந்த காஸ்டியூமில் சில மாற்றங்களை சுஷ்மிதா சொன்னார். அவர் சொல்வதைகேட்கும்படி லாரன்ஸும் கூறினார். இதில் கோபம் அடைந்த கேத்ரின், சுஷ்மிதாவை எடுத்தெறிந்து பேசினார். இந்த விவகாரம் சிரஞ்சீவி காதுக்கு சென்றதும் கேத்ரினை நீக்கிவிட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி கூறினார். அந்த வாய்ப்பு தற்போது லட்சுமிராய்க்கு சென்றது.
இப்படியொரு வாய்ப்பு அமையாதா என்று காத்திருந்த லட்சுமிராய் உடனடியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டதுடன் சிரஞ்சீவி அருகில் ஒட்டிநின்று போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டு அவருடன் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார். ‘உண்மையான சாதனையாளருக்கான உதாரணம் சிரஞ்சீவி. அவரது இதயம் தங்கம்போன்றது’ என ஏகத்துக்கு புகழ்ந்தும் தள்ளி இருக்கிறார். இந்த பாடல் காட்சிக்காக லட்சுமி ராய்க்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. கேத்ரினாவுக்கு ரூ.50 லட்சம் பேசப்பட்டிருந்ததாம்.