இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

பிரபல நடிகருடன் காதலா? - ஸ்ருதி திடீர் விளக்கம்

10/18/2016 2:12:31 PM
ரயில் விபத்து இழப்பீடு புத்தாண்டில் உயர்கிறது ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பதி கோயிலில் முன்னுரிமை தரிசனங்கள் ரத்து

இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் விளம்பர படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது. ஏற்கனவே ரன்பீர் கபூர், நடிகை கேத்ரினா கைப்பை காதலித்ததுடன், அவருடன் லிவிங் டூ கெதர் பாணியில் ஒரே வீட்டில் வாழ்ந்தும் வந்தார். இதற்கு ரன்பீர் தந்தை ரிஷிகபூர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் மாஜி காதலி தீபிகா படுகோனுடன் புதிய படமொன்றில் ரன்பீர் சேர்ந்து நடித்தார். அதில் நெருக்கமான முத்தக்காட்சிகளில் நடித்ததுடன் நைட் பார்ட்டிகளிலும் கலந்துகொண்டார். இது கேத்ரினாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ரன்பீருடனான காதலை பிரேக் அப் செய்துகொண்டு விலகினார்.

காதல் தோல்வியில் இருந்த சமயத்தில்தான் ரன்பீருடன் விளம்பர படங்களில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஸ்ருதிக்கு கிடைத்தது. அவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார். இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. இதுபற்றி மவுனம் காத்து வந்த ஸ்ருதி தற்போது பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது,’இதுபோன்ற வதந்திகளை கேட்பதற்கு எனக்கு நேரம் இல்லை. எனது வேலையில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

மற்றபடி கிசுகிசுக்களில் எனது கவனத்தை செலுத்துவதில்லை’ என்றார். வதந்திகளிலிருந்து விலகி இருக்கும் ஸ்ருதி ஹாசன் தற்போது சிங்கம் 3, சபாஷ் நாயுடு மற்றும் தெலுங்கில் ஒரு படம் என 3 படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த பிரேமம் படம் ஹிட்டாகி அவரது கையை உயர்த்தி இருக்கிறது.

மேலும் சில
  • ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி



  • கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஹீரோவாகிறார் வெங்கட்பிரபு உறுதி



  • தமிழிலும் 3டியில் ரிலீஸ் வீடியோ கேம் ஹாலிவுட் படமானது



  • சமந்தா நடிக்க மறுத்து விலகினார் சாவித்ரி ஆகப்போவது யார்? வித்யாபாலன்-நித்யா மேனன் போட்டி



  • விஜய் படத்தில் நடிக்கிறார் ஜோதிகா



  • விஷால்-ஆர்யா மோதலா? படத்திலிருந்து திடீர் விலகல்



  • பணம் தந்தால் நடிகைகள் ஆபாசமாக நடிப்பார்களா? டைரக்டர் சுராஜை லெப்ட் ரைட் வாங்கிய நயன்தாரா, தமன்னா



  • நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார் பிரணிதா



  • கிளாமராக நடிச்சாலும் தொப்புள் காட்டமாட்டேன் ஐஸ்வர்யா பாலிசி



  • ஜனவரி 29ம் தேதி சமந்தா நிச்சயதார்த்தம்



Facebook

Twitter

3 reel in a single day, finishing dubbing Rajini
ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]