இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் ஸ்ரேயா காதல் - கோலிவுட்டில் பரபரப்பு

10/14/2016 1:58:50 PM
ரயில் விபத்து இழப்பீடு புத்தாண்டில் உயர்கிறது ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பதி கோயிலில் முன்னுரிமை தரிசனங்கள் ரத்து


மழை படத்தில் அறிமுகமாகி பிறகு சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. தொடர்ந்து விஜய், விக்ரம், விஷால், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். வேகமாக வளர்ந்து வந்த அவருக்கு ஸ்பீட் பிரேக் போட்டதுபோல் புதிய நடிகைகளின் வரவு கடும் போட்டியாக அமைந்தது. நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளின் போட்டியையும் சமாளிக்க முடியாமல் திணறினார். இதனால் ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தெலுங்கு, இந்தி படங்களிலும் தனது அதிர்ஷ்டத்ைத சோதித்தார். அதுவும் பலன் தரவில்லை. ஸ்ரேயாவுக்கு 34 வயது ஆகிறது. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவே தற்போது வாய்ப்பு வருகிறது. இதற்கிடையில் சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் என்டி பாலகிருஷ்ணா ஜோடியாக ‘கவுதமிபுத்ரா சட்கர்ணி’யில் ராணி கெட்டப்பில் நடிக்கிறார்.
ஸ்ரேயாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். மாப்பிள்ளை தேடும் படலமும் நடக்கிறது. இந்நிலையில் மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் மும்பையில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு ஜோடியாக சென்ற இருவரும் அருகருகே அமர்ந்து உணவு சாப்பிட்டனர். நீண்ட நேரம் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தவர்கள் பிறகு அங்கிருந்து புறப்பட்டனர். இந்த ஜோடியை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அதை அவர்கள் கண்டுகொள்ளாததுபோல் நடந்து சென்றனர். இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பிராவோவை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்தமானவர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது ‘கண்ணம்’ ஸ்டைல் நடனம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரங்கள் மத்தி யிலும் பிரபலம் ஆகும்.

மேலும் சில
  • ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி



  • கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஹீரோவாகிறார் வெங்கட்பிரபு உறுதி



  • தமிழிலும் 3டியில் ரிலீஸ் வீடியோ கேம் ஹாலிவுட் படமானது



  • சமந்தா நடிக்க மறுத்து விலகினார் சாவித்ரி ஆகப்போவது யார்? வித்யாபாலன்-நித்யா மேனன் போட்டி



  • விஜய் படத்தில் நடிக்கிறார் ஜோதிகா



  • விஷால்-ஆர்யா மோதலா? படத்திலிருந்து திடீர் விலகல்



  • பணம் தந்தால் நடிகைகள் ஆபாசமாக நடிப்பார்களா? டைரக்டர் சுராஜை லெப்ட் ரைட் வாங்கிய நயன்தாரா, தமன்னா



  • நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார் பிரணிதா



  • கிளாமராக நடிச்சாலும் தொப்புள் காட்டமாட்டேன் ஐஸ்வர்யா பாலிசி



  • ஜனவரி 29ம் தேதி சமந்தா நிச்சயதார்த்தம்



Facebook

Twitter

3 reel in a single day, finishing dubbing Rajini
ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]