லாரன்ஸுடன் தகராறு கேத்ரின் தெரசா நீக்கம் -= லட்சுமிராய்க்கு திடீர் வாய்ப்பு
10/14/2016 1:58:02 PM
கடினமான நடன அசைவு, ஆபத்தான ஸ்டன்ட் காட்சி படமாக்குவதற்கு முன் அதனை அமைக்கும் நடன, ஸ்டன்ட் இயக்குனர்கள் மற்றும் அதில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளுக்குள் புரிதல் இருந்தால்தான் எண்ணியபடி காட்சிகள் படமாக்க முடியும். பெரும்பாலும் இதை எல்ே்லாருமே கடைபிடிக்கின்றனர். சில சமயம் கருத்துவேறுபாடு ஏற்படும்போது அது பிரச்னையாகிறது. சிரஞ்சீவி நடிக்கும் 150வது படம் ‘கைதி நம்பர் 150’. காஜல் அகர்வால் ஹீரோயின். இதில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்ரின் தெரசா ஒப்பந்தம் ஆனார். முதன்முறையாக ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடவிருக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சிரஞ்சீவி படத்துக்கு ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடனம் அமைத்திருக்கிறார். அந்த சென்டிமென்ட் இப்படத்திலும் தொடர வேண்டும் என்று சிரஞ்சீவி எண்ணியதையடுத்து நடனம் அமைக்க ஒப்புக்கொண்டார் லாரன்ஸ். கேத்ரின் நடனத்தை அமைக்க ஏற்பாடானது. படப்பிடிப்பு தினத்தன்று லாரன்ஸ், கேத்ரின் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது சர்ச்சையானது. கேத்ரின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் தரப்பில் கோரப்பட்டது. அவர் மறுத்துவிடவே இப்பிரச்னை சிரஞ்சீவியிடம் கொண்டு செல்லப்பட்டது. லாரன்ஸை நீக்குவதற்கு சிரஞ்சீவி சம்மதிக்கவில்லை. அதற்கு பதிலாக கேத்ரினை படத்திலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அவருக்கு பதிலாக லட்சுமிராய் நடனம் ஆட உள்ளார்.