இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உள்ளாட்சி தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

9/30/2016 2:59:51 PM
காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்துக்கு தண்ணீர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து கர்நாடக சட்டசபையில் விவாதம் உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல் முடிந்தது: கடைசி நாளில் மனுக்கள் குவிந்தன


சென்னை, -உள்ளாட்சி தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் வாகனங்களில் சோதனை தீவிரப்படுத்தப்படும் என்று மாநில  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுசம்பந்தமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் நடைபெறும் காலங்களிலும், தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரையிலும் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்குவதற்கான தடையினை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சமூக விரோதிகளை கண்காணித்து தேவைப்படும்போது சட்டத்திற்குட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வாக்காளர்கள் சுதந்திரமாகவும, நியாயமாகவும் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

தேர்தல் காலங்களில் அனுமதிபெறாத துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அவை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் விரிவாக விவாதிக்க வேண்டும். குற்றப் பின்னணி உடையவர்கள் மீதும், ஏற்கனவே தேர்தல் காலங்களில் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே, 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 பிரிவின்படி ஆயுதங்கள் எடுத்துச் செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரையில் இத்தடை உத்தரவு நடைமுறையில் இருக்க வேண்டும்.‘

தேர்தல் நாளுக்கு முந்தைய 3 நாட்களிலிருந்து இலகுரக வாகனங்கள், லாரிகள் ஆகியவற்றை முழுமையான சோதனை செய்வதன் முலம் மாவட்டத்தில் கடுமையான கண்காணிப்பினை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் தேர்தல் நடத்தப்படும் பகுதிகளில் விரும்பத்தகாத சமூகவிரோதிகள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வாகனங்களில் கொண்டு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆயுதங்கள் கொண்டு செல்ல பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு ஆணையின் நகல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடையே, சிறப்பான புரிந்துணர்வும், ஒத்துழைப்பும், தகவல் பரிமாற்றமும் இருக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
மேலும், பொதுமக்களிடையே நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தி சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்யும்பொருட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களிடையே நட்புணர்வும், நேர்மறையான எண்ணங்களும், முழுமையான நம்பிக்கையுடன்கூடிய அணுகுமுறையும் இருக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • 3 நாள் காவல் முடிந்தது: திருச்சி சீரியல் கில்லர் இன்று கோர்ட்டில் ஆஜர்



  • பள்ளி கல்வித் துறையில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு மறுப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு



  • அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்: திருவள்ளூரில் சாலை மறியல்



  • தமிழகம் - கர்நாடகம் இடையே 28வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்



  • தனியார் மருந்து கம்பெனியில் பாய்லர் வெடித்து பலி 4 ஆக உயர்வு



  • வீட்டில் தனியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் மர்ம கொலை



  • புழல் 22வது வார்டில் கழிவுகள் நிறைந்த வண்ணான் குளம்: தொற்றுநோய் ஆபத்து



  • தபால் நிலையத்தில் தீவிர தூய்மை பணி



  • திருவள்ளுர் காதி கிராப்டில் சிறப்பு விற்பனை துவக்கம்



  • வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.60 அதிகரிப்பு: ரூ.1026 ஆக நிர்ணயம்



Facebook

Twitter

நயன்தாராவுக்கு முக்கியத்துவம்? அதர்வா அச்சம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]