தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்
9/21/2016 3:23:46 PM
சென்னை, - வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. சென்னையில் சில இடங்களில் நேற்று இரவு, இன்று அதிகாலை லேசான மழை தூறல் காணப்பட்டது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.டெல்டா மாவட்டங்கள், வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.