இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

16வது நாளாக பஸ்கள் ஓடவில்லை - அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினசரி ₹25 கோடி இழப்பு

9/21/2016 3:19:45 PM
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை

ஓசூர், -கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிடும் விவகாரம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இரு மாநிலத்துக்கும் இடையே பஸ் மற்றும் லாரி போக்குவரத்து முடங்கி போயுள்ளது. தமிழக, கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினசரி ₹25 கோடி வரை யில் வசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகரில் இருந்து கடந்த 5ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அங்குள்ள கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 12ம் தேதி பெங்களூரில் கலவரம் ஏற்பட்டது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.

தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட 910 பஸ்களும், ஓசூர் வரை மட்டுமே இயக்கப் படுகிறது. அங்கிருந்து ஓசூர் எல்லையான ஜூஜூவாடி வரையில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. 4 கி.மீ. தூரம் நடந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளிக்கு செல்லும் மக்கள், பின்னர் அம்மாநில பஸ்கள் மூலம் பெங்களூரு, மைசூரு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இரண்டு மாநிலத்திற்குள்ளும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இரு மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படாததன் மூலம் தினசரி ₹25 கோடி வரையில் கட்டண வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ``ஓசூரில் இருந்து பெங்களூருக்கு, சேலம் கோட்டம் மூலம் தினசரி 55 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம், தினசரி ₹ 10 லட்சம் வசூல் கிடைக்கும். தற்போது ஓரிரு பஸ்கள் மட்டுமே ஜூஜூவாடி வரை இயக்கப் படுகின்றன. வௌிமாவட்டங்களில் இருந்து 900 பஸ்கள் வரை பெங்களூருக்கு இயக்கப்பட்டது. காவிரி பிரச்னையால் 15 நாட்களாக போக்குவரத்து முடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழக-கர்நாடக போக்குவரத்து கழகங்களுக்கு தினசரி ₹25 கோடி வரையில் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

மேலும் சில
  • தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்



  • முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை



  • இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு 300 போலீசார் கொண்ட தனிப்படை விசாரணை



  • கண்ணகி நகரில் விசாரணையின்போது வாலிபர் பலியான காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு



  • கோவையில் இயல்பு நிலை திரும்புகிறது - வன்முறையில் ஈடுபட்ட 50 பேர் சிக்கினர்



  • சாலையோர மரங்களை வெட்டுவதா? - திருவள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு



  • பெரியபாளையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்



  • . டீச்சர்ஸ் காலனியில் வசதிகள் இல்லாத பஸ் நிலையம் - பயணிகள் அவதி



  • குருவாயல் ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகத்தில் படையெடுக்கும் பாம்புகள்



  • கணவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் ஏரியில் குதித்து மகனுடன் பெண் தற்கொலை செய்தது அம்பலம் - அடையாளம் தெரிந்தது



Facebook

Twitter

இளம் இயக்குனர்கள் மீது பிரியதர்ஷன் கடும் விமர்சனம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]