எண்ணூர் அனல்மின் நிலைய பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு
9/21/2016 3:17:35 PM
திருவொற்றியூர், -சென்னை எண்ணூர் அனல் மின்நிலைய குடியிருப்பில் வசிப்பவர் பென்னி. இவரது மனைவி விஷாரந்த் (50). இவர் எண்ணூர் அனல் மின்நிலைய ஊழியர். இவர் இன்று காலை கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் விஷாரந்த்தை வழிமறித்து முகவரி கேட்பது போல் நடித்துள்ளனர்.அவர் முகவரி சொல்லிக்கொண்டிருந்தபோது ஒருவன் திடீரென விஷாரந்த்தின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியைப் பறித்தான். திடுக்கிட்ட விஷாரந்த் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம ஆசாமிகள் பைக்கில் தப்பி சென்றனர்.இதுகுறித்து எண்ணூர் காவல் நிலையத்தில் விஷாரந்த் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.