இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அரசு கொடுத்த நிலம் அபகரிப்பு - பொன்னேரி ஆர்டிஓ அலுவலகத்தில் கரிமணல் கிராம மக்கள் போராட்டம்

9/21/2016 3:14:48 PM
வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் 26ல் விண்ணில் பாய்கிறது மினி டெம்போ கவிழ்ந்து 32 தொழிலாளர்கள் படுகாயம் ; திருவள்ளூர் அருகே பரபரப்பு


பொன்னேரி, -ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கரிமணல் பகுதியில் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் வீடுகள் கட்டியதுபோக சுமார் ஒரு ஏக்கர் நிலம் காலியாக இருந்தது. இந்த இடத்தில் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் குடிசை அமைத்தனர். இதை அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசாருடன் விரைந்தனர். காலி இடத்தில் கட்டப்பட்ட குடிசைகளை பிடுங்கி எறிந்ததால் பிரச்னை பெரிதானது. இதையடுத்து, கரிமணல் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கு மேற்பட்டவர்கள் கடந்த 4 நாட்ளாக உண்ணாவிரதம் இருந்தனர். 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு உருவானது.
இந்த நிலையில், பொன்னேரி டிஎஸ்பி கண்ணன் தலைமையில் போலீசார் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்களை பொன்னேரியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர். இவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஊருக்கு செல்ல மாட்டோம் என கூறி திருமண மண்டபத்திலேயே தங்கி இருந்தனர். அதிகாரிகளின் உத்தரவின்படி, மண்டப உரிமையாளர் மின்சாரம், குடிநீரை தடை செய்தனர். தண்ணீர் கிடைக்காததால் கடைகளில் வாட்டர் பாக்கெட் வாங்கி குடித்தனர்.

இந்த நிலையில், இன்று காலை கரிமணல் பகுதி மக்கள் பொன்னேரி சப்கலெக்டரை சந்திக்க மண்டபத்தில் இருந்து வெளியேறி பொன்னேரி ஆர்டிஓ அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அவர்களை வழிமடக்கிய பொன்னேரி போலீசார், “சப்கலெக்டர்  பணி காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு செல்கிறார். அவரை சந்திக்க முடியாது” என கூறி ஆர்டிஓ அலுவலகத்தின் கேட்டை பூட்டினர். இதனால் ஆத்தி–்ரமடைந்த கிராம மக்கள் ஆர்டிஓ அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பொன்னேரி டிஎஸ்பி கண்ணன் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மக்கள், ‘’கடந்த 4 நாளாக உண்ணாவிரதம் இருந்தோம். கலெக்டர் வந்து பார்க்கவில்லை’ என்று கூறினர்.

மேலும் சில
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகா கோரிக்கையை மத்திய அரசு ஏற்க கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்



  • வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் 26ல் விண்ணில் பாய்கிறது



  • ஜெயலலிதா குணமடைய திருநாவுக்கரசர் வாழ்த்து



  • சென்னை ஏர்போர்ட்டில் 1.35 கோடி ஹவாலா பணம் சிக்கியது - குருவிகள் 6 பேர் கைது



  • உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பி.,க்கள் மாற்றம் - டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு



  • ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமானது - அப்போலோ மருத்துவமனை தகவல்



  • மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும் ; கருணாநிதி அறிக்கை



  • ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை



  • அமெரிக்காவில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் குடந்தை பாதுகாப்பு மையத்தில் சேர்ப்பு



  • வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் - திருப்பூரில் பரபரப்பு



Facebook

Twitter

நயன்தாராவை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கிய வில்லன்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]