இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னை பல்கலையில் விடைத்தாள் வாங்குவதில் தாமதம் - செமஸ்டர் தேர்வு தள்ளிப்போகும் அபாயம்

9/21/2016 3:14:13 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

சென்னை, - சென்னை பல்கலைகழகத்தில் துணை வேந்தர் நியமிக்கப்படாததால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. விடைத்தாள் அச்சிட உத்தரவிடும் ஆவணம் உயர்கல்வித்துறை அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதால் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.சென்னை பல்கலைகழகம் 1857ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் பல்கலைகழகம். பல்கலைகழகத்தின்கீழ் 134 இணைவு கல்லூரிகளும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற 23 கல்லூரிகளும் உள்ளன. இந்த பல்கலைகழகத்தின் துணை வேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக்காலம் ஜனவரி மாதம் முடிந்துவிட்டது. அதன்பின் பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் துணை வேந்தரின் பணிகளை மேற்கொள்ள உயர்கல்வித்துறை செயலாளர், பல்கலைகழக பதிவாளர் உட்பட பலர் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. பல்கலைகழகம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த குழுவே எடுக்கும். இதனால் பல்கலைகழகத்தில் ஏராளாமான ஆவணங்கள் கையெழுத்தாககாமல், பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.

சென்னை பல்கலைகழகத்தின் தொலைதூரக்கல்வி மையத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் 29ம் தேதி தேர்வுகள் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடக்க உள்ளது. சென்னை பல்கலைகழகம், உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடக்க உள்ளது. இதற்காக பணிகளை தொடங்குதல், விடைத்தாள் அச்சிட உத்தரவிடுதல் ஆகியவை செப்டம்பர் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் விடைத்தாள் அச்சிட உத்தரவிடுவது தொடர்பான ஆவணம் தலைமை செயலகத்தில் உள்ள உயர்கல்வித்துறை அலுவலகத்தில் இன்னும் கையெழுத்தாகாமல் நிலுவையில் உள்ளது. இதனால் அடுத்த மாதம் தொடங்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் காலதாமதமாக தொடங்கப்படலாம் என்று பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவர் கூறினார்.

மேலும் சில
  • செலவு செய்ய கட்சியினர் தயாராக இல்லை - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக தயக்கம்



  • பெரியபாளையம் கோயில் 10வது வாரம் நிறைவு அம்மனுக்கு அபிஷேகம்



  • ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி நல்லக்கண்ணு தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்



  • அபராதம், நடவடிக்கை எதிரொலி - ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டம்



  • மு.க.ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு



  • உள்ளாட்சி தேர்தலையொட்டி டுவிட்டர் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையம் உத்தரவு



  • ரூ15 கோடிக்கு அமெரிக்காவில் விற்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் அரியலூர் வந்தது



  • தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை மாயம் - அதிகாரி பகீர்



  • காவிரி விவகாரத்தில் வன்முறை டேங்கர் லாரிகள் முடங்கியதால் கேஸ் தட்டுப்பாடு அபாயம்



  • தேயிலை தோட்டத்தில் தூங்கிய யானைகள் - வால்பாறையில் பரபரப்பு



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]