இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காப்பகத்தில் மீட்கப்பட்ட 63 பேரில் 21 சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு - திருவள்ளூர் கலெக்டர் தகவல்

9/21/2016 3:12:09 PM
இந்திய ராணுவ தாக்குதல் உண்மைதான் - டி.வி. நிருபரிடம் பாக். போலீஸ் அதிகாரி ஒப்புதல் பெரியபாளையம் அருகே பரபரப்பு - கை கால்களை கட்டி கழுத்தை திருகி 3 வயது சிறுவன் கொடூர படுகொலை ; கழிவுநீர் தொட்டியில் சடலம் வீச்சு


திருவள்ளூர், -திருவள்ளூர் அருகே அனுமதியின்றி செயல்பட்டுவந்த காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 63 சிறுவர்களில், 21 சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.திருவள்ளூர் அருகே உள்ளது தேவந்தவாக்கம் கிராமம். இங்கு உமா என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து, சிறகுகள் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். தரை தளத்தில் அரசு அனுமதி இன்றி உயர்நிலைப் பள்ளியும் நடத்தி வந்தார். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இயங்கி வந்த இப்பள்ளி குறித்து திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லிக்கு புகார் சென்றது.

கலெக்டர் உத்தரவின்படி, நேற்று அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ‘சிறுவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, குளியலறை என எதுவும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் பழவேற்காடு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்களை, குறுகிய அறைகளில் அடைத்து வைத்து, சோலார் மின்வேலி அமைத்திருந்தனர்.

இதையடுத்து, காப்பகத்தில் இருந்து 63 மாணவ, மாணவிகளை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவர்களை பஸ்கள் மூலம் திருவள்ளூர் அருகே உள்ள சிறுவானூர் ஆசிர்வாத் ஆசிரமத்திற்கு கொண்டு வந்து தங்க வைத்தனர்.இதுகுறித்து கலெக்டர் சுந்தரவல்லி கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 21சிறுவர்களை அவர்களது பெற்றோர்களிடம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 38 சிறுவர்களை அம்மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற சிறுவர்களை அவர்களது பெற்றோர் விரும்பினால் அவர்களிடம் ஒப்படைக்கவும், இல்லையேல் பதிவுப்பெற்ற குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய வசதிகள் இன்றியும், பதிவு செய்யப்படாமல் இயங்கும் இல்லங்களை கண்டறிந்து மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் சில
  • சென்னை-திருப்பதி சாலையில் பெயர் பலகைகள் இல்லாத கிராமங்கள்



  • கீரப்பாக்கம் ஊராட்சியில் சாலையில் செல்பவர்களை கடித்து குதறும் வெறிநாய்கள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு



  • வீட்டுமனை பட்டா இழுத்தடிப்பு 24 கொத்தடிமை தொழிலாளர் அவதி



  • பொன்னேரி அருகே ரயில் நிலையங்களில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: கும்பல் ஓட்டம்



  • இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - ஒரே கிராமத்தை சேர்ந்த இருவர் பலி ; திருவள்ளூர் அருகே சோகம்



  • சென்னை நகரில் பிளாட்பார ஆக்கிரமிப்பினால் மக்கள் அவதி - சாலைகளில் வாகனங்கள் நிறுத்தம்



  • ஜெயலலிதா உடல்நலக்குறைவு எதிரொலி - தீக்குளித்த அதிமுக செயலாளருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை



  • கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 18, 19ம் தேதி வேலைநிறுத்தம்



  • அரசு பள்ளியில் தீ விபத்து மாணவர்கள் உயிர் தப்பினர்



  • கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 குழந்தைகள் பரிதாப பலி



Facebook

Twitter

நிர்வாணமாக பார்க்க ஆசையா? - கேள்வி கேட்டவரை கலங்கடித்த ராதிகா ஆப்தே
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]