உடம்பு பற்றி கமென்ட் அடிப்பதா? - சோனாக்ஷி கோபம்
9/21/2016 3:07:38 PM
பாலிவுட் ஹீரோயின்களுக்கு ஸ்லிம் தோற்றம் என்பது கட்டமாயமாக்கப்படாத விதியாக உள்ளது. ஒல்லிபிச்சான் நடிகைகளுக்குதான் வரவேற்பு என்பதால் உடற்பயிற்சிக்கு மெனக்கெடுகின்றனர். இந்த விதிகளுக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளாதவர் லிங்கா நாயகி சோனாக்ஷி சின்ஹா. பூசினார்போல் இருந்தாலும் கொள்ளை அழகு என்று அவரை பாராட்டாதவர்கள் கிடையாது. ஆனாலும் சிலர் அவரது தோற்றத்தை நக்கலடிக்கின்றனர். இதுபோல் பேசுபவர்களுக்கு சூடு வைத்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா.
இது பற்றி சோனாக்ஷி கூறியது:நடிப்பை பற்றி பேசாதவர்கள் எனது தோற்றத்தை பற்றி பேச தேவையில்லை. சாப்பிடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் எனது ேதாற்றத்தையும் நான் விரும்புகிறேன். வழக்க மான தோற்றத்துடன் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. எனது தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்கு மற்ற யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. எந்தளவுக்கு சாப்பிடுகிறோனோ அந்தளவுக்கு உடற்பயிற்சியும் செய்வது பிடிக்கும். சிலசமயம் ரொம்பவே விரும்புகின்றவற்றை விடுவதற்கும் கடுமையாக முயற்சிக்கிறேன்.