இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

கர்ப்ப கால பிரச்னைகளை போக்கும் இஞ்சி, புதினா, எலுமிச்சை

9/21/2016 3:04:09 PM
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை


இளம் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து இன்றைய நாட்டு மருத்துவத்தில் தெரிந்து கொள்வோம். பொதுவாக இளம் தாய்மார்கள், கருவுற்ற பெண்களுக்கு காலைநேரங்களில் குமட்டல், வாந்தி, மயக்கம், களைப்பு, பசியின்மை போன்ற பல பிரச்னைகள் இருக்கும். கர்ப்பிணிகளின் மார்னிங் சிக்னஸ் எனப்படும் இந்த பிரச்னைகளுக்கு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சில மருந்துகள் தயாரிக்கலாம்.  தேவையான பொருட்கள்- இஞ்சி, புதினா, தேன், எலுமிச்சை சாறு. முதலில் சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் அரை டீஸ்பூன் அளவு இஞ்சிச்சாறு, புதினா சாறு கலந்து அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து வடிகட்டி காலை நேரங்களில் குடித்துவர இப்பிரச்னைகள் நீங்கும். விருப்பப்பட்டால் தேன் சேர்க்காமலும் இதனை குடித்து வரலாம். பிள்ளைப்பேறு முதல் பிரசவகாலம் வரை பெண்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக மனதளவில் அச்சம் ஏற்படும். இந்த நேரத்தில் ஊட்டச்சத்தான உணவு அவசியமாகிறது. இதற்கு இஞ்சி, புதினா ஆகியவை மிக முக்கியமான மருந்தாகிறது. இவற்றிற்கு வயிற்றில் சுரக்கும் அமிலத்தன்மையை போக்கும் தன்மை உண்டு. இவற்றை கொண்டு தயாரிக்கும் கஷாயம் சிறந்த மருந்தாகிறது. இதற்கு தேவையான பொருட்கள். இஞ்சி, புதினா, பனங்கற்கண்டு. இஞ்சி, புதினா இவற்றை கழுவி சுத்தம் செய்து அரைத்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர குமட்டல் வாந்தி நிற்கும். உடலில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சில ெபாதுவான பிரச்னைகளை போக்கும் தன்மை இஞ்சி, புதினா, எலுமிச்சை, கொத்துமல்லி, சோற்றுகற்றாழை போன்றவற்றிற்கு உண்டு. இனி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கை கால் வீக்கம் மற்றும் முக வீக்கத்துக்கு மருந்து தயாரிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம். தனியா அல்லது கொத்துமல்லிக்கு உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும் தன்மை உண்டு. இதற்கு பச்சை கொத்துமல்லி அல்லது தனியா சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். இவற்றை கொதிக்க வைத்து அதனை வடிகட்டி அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கை கால் முக வீக்கம் கட்டுப்படும். அடுத்து கர்ப்பிணிகளுக்கு உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புக்கான பசை தயாரிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: ஆலு வேரா எனப்படும் சோற்றுக்கற்றாழை பசை சிறிதளவு, தேங்காய் எண்ணை மற்றும் சீரகம். ஒரு கடாயில் சிறிதளவு சோற்றுக்கற்றாழை பசை சேர்த்து அதனுடன் சிறிது தேங்காய் எண்ணை மற்றும் சீரகம் சேர்த்து சிறுதீயில் வைத்து பசை பதத்தில் காய்ச்சவும். அதனை ஆறவைத்து உடலில் அரிப்பு, எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வர இப்பிரச்னை தீரும். சோற்றுக்கற்றாழை உள்பசையை அப்படியே எடுத்தும் தடவிவரலாம். இத்தகைய நாட்டு மருத்துவத்தை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டே தேவைப்படும் நேரங்களில் செய்து கொடுக்கலாம்.

மேலும் சில
  • பாதப்பராமரிப்புக்கான மருத்துவமுறைகள்



  • உடலுக்கு நன்மை தரும் குளியல் தைலங்கள்



  • கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை



  • தாய்ப்பாலை பெருக்கும் முருங்கை பூ



  • பக்க வாதத்தை தீர்க்கும் வாத நாராயணன்



  • டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு



  • சளி பிரச்னையை போக்கும் தூதுவளை



  • படர்தாமரையை போக்கும் பூண்டு



  • கல்லீரலுக்கு பலம் தரும் அரைக்கீரை



  • தோல் சுருக்கத்தை போக்கும் உருளைக்கிழங்கு



Facebook

Twitter

இளம் இயக்குனர்கள் மீது பிரியதர்ஷன் கடும் விமர்சனம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]