இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கியது - வீடியோ கான்பரன்சிங்கில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

9/21/2016 2:44:53 PM
வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் 26ல் விண்ணில் பாய்கிறது மினி டெம்போ கவிழ்ந்து 32 தொழிலாளர்கள் படுகாயம் ; திருவள்ளூர் அருகே பரபரப்பு

சென்னை, -சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே  உயர்த்தப்பட்ட பாதையில் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி பயணிகளுக்கான  மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மற்றொரு வழித்தடத்தடமான  வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் வரையான வழித்தடத்தில், சின்னமலை - விமான  நிலையம் வரை சுமார் 9 கி.மீ. தூரத்துக்கு உயர்த்தப்பட்ட பாதையில் ரயில்  தண்டவாளம், மின்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் முடிவடைந்து தயார் நிலையில்  இருந்தது. பயணிகள் சேவையை தொடங்குவதற்கு முன்னதாக, ரயில்வே பாதுகாப்பு  ஆணையர் சுதர்சனம் நாயக் தலைமையிலான குழுவினர் கடந்த ஜூலை மாதம் இந்த  வழித்தடத்தில் மோட்டார் பொருத்திய டிராலியில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர், கிண்டி,  சின்னமலை ஆகிய 6 ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளம், மின்பாதைகள், சிக்னல்  ஆகியவைகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில்  சேவையை தொடங்கலாம் என்றும் அனுமதி அளித்தனர்.இதையடுத்து,  விமான நிலையம் - சின்னமலை இடையே பயணிகளுக்கான மெட்ரோ ரயில் சேவையை  முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இருந்து  வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். மேலும், விமானநிலையம்,  மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை, பரங்கிமலை ஆகிய ரயில்  நிலையங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதனிடையே,  காலை 11 மணிக்கு மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை விமான நிலையத்துக்கு வந்து ஓய்வு அறையில் காத்திருந்தனர். காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் 12 மணிக்கு கொடியசைத்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த போது, மத்திய அமைச்சர்கள் விமான நிலையத்தில் இருந்தபடி கொடியசைத்தனர். அதைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட முதல் ரயிலை  அம்சவேணி என்ற பெண் ஓட்டினார். பகல் 12.10 மணிக்கு கிளம்பிய இரண்டாவது மெட்ரோ ரயிலில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன்.  ராதாகிருஷ்ணன், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் சின்னமலை வரை பயணம் செய்தனர். சின்னமலை முதல் விமான நிலையத்துக்கான கட்டணம் ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சில
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகா கோரிக்கையை மத்திய அரசு ஏற்க கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்



  • வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் 26ல் விண்ணில் பாய்கிறது



  • ஜெயலலிதா குணமடைய திருநாவுக்கரசர் வாழ்த்து



  • சென்னை ஏர்போர்ட்டில் 1.35 கோடி ஹவாலா பணம் சிக்கியது - குருவிகள் 6 பேர் கைது



  • உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பி.,க்கள் மாற்றம் - டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு



  • ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமானது - அப்போலோ மருத்துவமனை தகவல்



  • மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும் ; கருணாநிதி அறிக்கை



  • ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை



  • அமெரிக்காவில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் குடந்தை பாதுகாப்பு மையத்தில் சேர்ப்பு



  • வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் - திருப்பூரில் பரபரப்பு



Facebook

Twitter

நயன்தாராவை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கிய வில்லன்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]