தனி ஆளாக போட்டியை மாற்றக்கூடியவர் - இந்திய அணி அஸ்வினை சார்ந்தே உள்ளது ; கபில்தேவ் பாராட்டு
9/20/2016 3:16:08 PM
புது ெடல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அளித்த பேட்டி: சச்சின், டிராவிட், கங்குலி, விவிஎஸ் லஷ்மண், ேசவாக், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் என இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓய்வு பெற்றனர். முன்னணி வீரர்களை இழக்க நேரிட்டால், அந்த சரிவில் இருந்து மீண்டு வர ஒரு அணிக்கு 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்திய அணி விரைவாக மீண்டு விட்டது. முன்னணி வீரர்களை இழந்த எந்த அணியும், இந்தியாவை போல் இவ்வளவு விரைவாக மீண்டதில்ைல.
விராட் கோஹ்லி மிகவும் ஆக்ரோஷமானவர். டோனியுடன் ஒப்பிடும்போது வேறுபட்டு காணப்படுகிறார். ஆனால் அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும் என பாசிட்டிவ்வாக சிந்திக்கிறார். இந்திய கிரிக்கெட்டிற்கு இது ஒரு நல்ல அறிகுறி. இதை நாம் ஆஸ்திரேலியாவிலேயே பார்த்தோம். போட்டியின் கடைசி நாளில் 400க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்ய அவர் தயாராக இருந்தார். டோனி ஏற்கனவே நாட்டிற்கு நிறைய செய்து விட்டார். தற்போது அவர் செய்வதை எல்லாம் நான் போனஸாகதான் பார்க்கிறேன். எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்கே தெரியும். இதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் தனி ஆளாக போட்டியை மாற்றக்கூடிய திறமை வாய்ந்தவர். இந்திய அணி அவரை சார்ந்தே உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களின் முக்கிய கவலையாக பிட்னஸ் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.