விபத்தில் வாலிபர் பலி - நுவான் குலசேகரா கைது
9/20/2016 3:15:29 PM
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா, நேற்று காலை காரில், கண்டியில் இருந்து கொழும்பு வந்து கொண்டிருந்தார். இலங்கையின் அபாயகரமான சாலைகளில் ஒன்றான ஏ-1 தேசிய ெநடுஞ்சாலையில், ெகாழும்பு நகரின் கிழக்கு திசையில், 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடவதா பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 28 வயது வாலிபர் உயிரிழந்தார். இது தொடர்பாக குலசேகரா கைது செய்யப்பட்டார். பின்னர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், குலசேகராவுக்கு நேர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பஸ் ஒன்றை ஓவர் டேக் செய்ய முயன்றார். இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாலிபர், குலசேகராவின் பாதையில் வந்து விட்டார். விபத்தில் உயிரிழந்த வாலிபரின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.