இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்திரா குடியிருப்பு திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

9/20/2016 3:07:40 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

புதுடெல்லி,-மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது கடந்த 1985ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பெயரில் கொண்டுவரப்பட்ட இந்திரா குடியிருப்பு திட்டத்தை ரத்து செய்ய மத்திய பாஜ அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தருவதற்காக கடந்த 1985ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு திட்டம் கொண்டு வந்தது. இந்த திட்டத்துக்கு ‘இந்திரா குடியிருப்பு திட்டம்’(இந்திரா அவாஸ் யோஜனா) என பெயரிடப்பட்டது. இந்த திட்டம் இப்ேபாதும் அமலில் உள்ளது.

இந்நிலையில், தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசு, இந்திரா குடியிருப்பு திட்டத்தை வருகிற மார்ச் மாதத்துடன் நிறுத்திவிட திட்டமிட்டுள்ளது. இதற்து பதிலாக ‘பிரதமர் குடியிருப்பு திட்டம்’ என்ற பெயரில் புதிய கிராமப்புற ஏழைகள் குடியிருப்பு திட்டத்தை வருகிற அக்டோபர் மாதமே அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டம் அடுத்தமாதமே அமல்படுத்தப்பட்டாலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்திரா கிராமப்புற ஏழைகள் குடியிருப்பு திட்டம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை செயல்படுத்தப்படும். அடுத்த நிதி ஆண்டு முதல் அதாவது 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் புதிய திட்டமான ‘பிரதமர் கிராமப்புற ஏழைகள் குடியிருப்பு திட்டம்’ மட்டுமே அமலில் இருக்கும். இந்திரா குடியிருப்பு திட்டம் ரத்து செய்யப்பட்டுவிடும்.வருகிற 2019ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகள் கட்டுவது என்பதே, பாஜ அரசு அடுத்த மாதம் கொண்டுவரும் புதிய திட்டத்தின் நோக்கமாகும்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தற்போது அமலில் உள்ள திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் கட்டுமான பணிகளை இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் முடிக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சில
  • ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல்



  • ரயில்வேயில் இந்தி பயன்படுத்தப்படுகிறதா? கண்காணிக்க அதிகாரி நியமனம்



  • ‘‘என்னை பிரதமராக்குங்கள்’’ - ஆசம்கான் காமெடி



  • ஆந்திர புதிய தலைநகர் அமராவதி அக்.3ம் தேதி தொடக்கம்



  • 92 ஆண்டு வரலாறுக்கு முற்றுப்புள்ளி ரயில்வே பட்ஜெட் இனி இல்லை - நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு



  • காவிரி பிரச்னை தமிழக-கர்நாடக பஸ்கள் 17வது நாளாக முடக்கம்



  • காவிரி மேலாண்மை வாரியம் தொடங்குவது எப்போது? - மத்திய அரசு பரிசீலனை



  • மும்பை டான்ஸ் பார்களில் மது விற்க தடையில்லை - சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ‘எங்களுக்கு யாரிடமும் சர்டிபிகேட் தேவையில்லை’ - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம்



  • உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் - ராகுல் காந்தி குற்றம் சாட்டு



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]