மெட்ரோ வாட்டர் லாரி மோதியதில் சமையல்காரர் உடல்நசுங்கி சாவு
9/20/2016 3:04:49 PM
பெரம்பூர், -சென்னை ஓட்டேரி பேரக்ஸ் ரோட்டை சேர்ந்தவர் தினகரன் (48). இவர் சமையல் வேலை செய்தார். இன்று காலை வேலைக்கு பைக்கில் சென்றார். அப்போது பின்னாடி வந்த மெட்ரோ வாட்டர் லாரி, அவரது பைக் மீது மோதியது. கீழே விழுந்த தினகரன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது.இதில் உடல் நசுங்கிய தினகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு உருவானது. விபத்து பற்றி அறிந்ததும் கீழ்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தினகரன் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லாரி டிரைவர் மோகனை (25) கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர்.