கடையை நொறுக்கிய வாலிபர் கைது
9/20/2016 3:04:29 PM
ஆவடி, -ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை கர்லப்பாக்கம் மெயின்ேராட்டை சேர்ந்தவர் ரமேஷ் (36). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அத்துடன் ரீசார்ஜ் செய்து வருகிறார்.கடந்த 17ம் தேதி கர்லப்பாக்கம் பெரிய தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திக் (23) கடைக்கு வந்துள்ளார். பணம் கொடுக்காமல் ஐம்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் முடியாது என்றதால் அவரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி ரோட்டில் வீசியுள்ளார். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.