இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உத்திரப்பிரதேச தேர்தலையொட்டி மகா யாத்திரை செல்லும் ராகுல்: 2500 கிமீ பயணம் மேற்கொள்கிறார்

9/4/2025 2:56:55 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்

புதுடெல்லி: உத்திரப்பிரதேச தேர்தலையொட்டி, கட்சியை பலப்படுத்தும் வகையில், மகா யாத்திரையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பங்கேற்கிறார். ஏழைகள்,  விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். உத்திரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும்  சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பாஜ, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் சூழல் உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள இக்கட்சிகள் தயாராகி வருகின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து காங்கிரஸ் பின்னடவை சந்தித்து வருகிறது. தனது செல்வாக்கை நிரூபிக்க உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை  பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மூத்த தலைவர் ஷீலா தீட்ஷித் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் மாநில தலைவர் ராஜ்பாப்பர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் ஷீலா தீட்சித்தும் மக்களை  சந்தித்து வருகிறார். உத்திரபிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தியும் களமிறங்குகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த மாதம் வாரணாசியில் நடந்த  பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார். இந்நிலையில், துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்குபெறும் மகா யாத்திரைக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த  யாத்திரை நாளை மறுநாள் உத்திரபிரதேச மாநிலம், தியோரியா பகுதியில் தொடங்குகிறது. சுமார் 2500 கிமீ தூரத்துக்கு ராகுல் பயணம் செய்கிறார்.

233 தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்கள், நகரங்களில் இந்த யாத்திரை நடக்கிறது. யாத்திரையின்போது, ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களை சந்தித்து  குறைகளை கேட்டறிகிறார். அவர்களது உரிமைகள் குறித்து எடுத்துரைக்கிறார். ராகுல் காந்தியின் யாத்திரை மூலம் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என  காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • கெஜ்ரிவாலுக்கு 13ம் தேதி தொண்டையில் ஆபரேஷன் - பெங்களூருவில் மீண்டும் 10 நாள் சிகிச்சை



  • ஒரே தேசம்; ஒரே தேர்தல் மோடி கோரிக்கைக்கு பிரணாப் ஆதரவு



  • பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் - காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச் சூடு



  • பாலியல் வழக்கில் அமைச்சர் கைது - கெஜ்ரிவால் மீது நம்பிக்கை போய் விட்டது : ஹசாரே



  • தலித்கள் மீதான தாக்குதல் ராஜஸ்தானில்தான் அதிகம் - சட்டம்-ஒழுங்கு மோசம் என காங். தாக்கு



  • உ.பி. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற ஏழைகளுக்கு ஸ்மார்ட் போன் அகிலேஷ் புது திட்டம்



  • உ.பி. ஐகோர்ட் நீதிபதிகள் நியமனம் 11 வக்கீல்களை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்



  • தியோரியா முதல் டெல்லி வரை - 2500 கி.மீ. கிஷான் யாத்திரை ராகுல்காந்தி தொடங்கினார் ; உ.பி. சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்



  • உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுமா?



  • பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் கொண்டாட்டம் துவக்கம்



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]