அயனாவரம் ஜுவல்லரியில் துணிகரம் 9 கிலோ நகை கொள்ளை: மேனேஜர் ஓட்டம்; சிசிடிவி கேமரா அபேஸ்
9/4/2025 2:51:45 PM
கீழ்பாக்கம்: சென்னை அயனாவரம் நகைக் கடையில் 9 கிலோ நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மேலாளர், ஊழியர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6வது தெருவில் வசிப்பவர் கோபால்ராம் (47). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் பாலாஜி தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகின்றார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது கடையில் மேலாளர் தீபக் உள்பட 5 பேர் பணியாற்றுகின்றனர். தீபக், கடந்த 3 வருடத்துக்கு முன் வேலைக்கு சேர்ந்தார். சுறுசுறுப்பாக வேலை செய்து உரிமையாளரின் நம்பிக்கையை பெற்றார். இதனால் நகைக் கடையை திறக்கும் பொறுப்பை தீபக்கிடம் கோபால்ராம் கொடுத்தார். இவர் கடைக்கு வராத சமயத்தில் தீபக்கே கடையை திறந்து வியாபாரத்தை கவனித்து வந்தார். இவர் கோபால்ராம் வீட்டின் மாடியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், வேப்பேரியில் உள்ள ஜெயின் கோயில் திருவிழாவுக்கு செல்வதற்காக நேற்று கடைக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, கோபால்ராம் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றார். நகைக் கடையின் சாவி, தீபக்கிடம் இருந்தது. விழா முடிந்து அனைவரும் நேற்றிரவு வீடு திரும்பினர். வியாபாரம் விஷயமாக பேசுவதற்கு தீபக்கை கோபால்ராம் தேடியபோது அவர் வீட்டில் இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் கோபால்ராமுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நகைக்கடையை திறந்து பார்த்தார்.
இரும்பு லாக்கரில் வைத்திருந்த செயின், மோதிரம், பிரேஸ்லெட் உள்பட ஏராளமான நகைகள் மாயமாகி இருந்ததால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். நகைகளை எண்ணி பார்த்தபோது மொத்தம் 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அத்துடன் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயும் காணவில்லை. சில நகைகள், தரையில் சிதறிக்கிடந்தன. இதுபற்றி அயனாவரம் குற்றப்பிரிவு போலீசில் கோபால்ராம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கண்ணகி போலீசாருடன் நடத்தப்படுகிறது.