பூவை.மூர்த்தி நினைவு நாள் ரத்ததானம், அன்னதானம்
9/3/2025 1:03:51 PM
திருவள்ளூர், -புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை.மூர்த்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர் அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள பூவை.மூர்த்தியின் நினைவிடத்தில், 14ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கட்சி தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாநில நிர்வாகிகள் பூவை. முகிலன், எம்.மாறன், ஐ.ஏழுமலை, பழஞ்சூர் வின்சென்ட், தளபதி செல்வம், ஆர்.சரவணன், கூடப்பாக்கம் குட்டி, மணவூர் மகா, வக்கீல் கே.எம்.தர், தாமஸ் பர்னபாஸ், சைமன் பாபு, வலசை எம்.தருமன், வியாசை ப.சிகா, பூண்டி பாபு, ஆர்.டி.சகாயம், டி.ருசேந்திரகுமார், சி.ஜெய்சுந்தர், கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன், பிரீஸ் பன்னீர், கோவிந்த், சித்துக்காடு எஸ்.ஏகாம்பரம், மாவட்ட நிர்வாகிகள் கூடப்பாக்கம் ஜேம்ஸ், எஸ்.பி.சி.தனசேகர், பரணிமாரி, கோலடி பாரதி, கண்ணதாசன், நயப்பாக்கம் மோகன், சித்துக்காடு ஜெ.ராஜன், சி.கோபி, வி.அனுமந்தன், ஓ.இ.சங்கர், திருப்பாச்சுர் சிவா, சுருளி வீரமணி, எம்.எழில்வண்ணன், டி.இளஞ்செழியன், ஏ.கே.சிவராமன், எம்.எஸ்.கே.முருகையன், டி.கே.சி.வேணுகோபால், ராக்கெட் ரமேஷ், ஏ.மதன்ராஜ், திருமழிசை நகர நிர்வாகிகள் இ.ராஜேந்திரன், ஆர்.ஏழுமலை, ஜெ.பாபு, கே.முருகன், ஒன்றிய, நகர நிர்வாகிகள் என்.பி.முத்துராமன், ஓதிகை தாமஸ், எஸ்.பார்த்தீபன், அதிகை வேலா, மப்பேடு சரவணன், தினகரன், ஏ.கே.தமிழ், ராம்ஜி, விமல்ஜி, தண்டலம் கோபிநாத், பாஸ்கரன், எம்.தர், ஆறுமுகம், மைக்கேல் உட்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து ரத்ததான முகாம் நடந்தது. புரட்சி பாரதம் தொண்டர்கள் 150 பேர் ரத்ததானம் செய்தனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு ராக்கெட் ரமேஷ் தலைமையில் தொண்டர்கள் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.